Skip to main content

திருமணம் செய்துகொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்...

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

பிரபல தமிழ்ப்பட இயக்குநர் ஏ.எல். விஜய் அமலா பாலுடன் விவகாரத்தானதுடன் இரண்டு வருடங்களாக திருமணம் ஏதும் செய்துக்கொள்ளாமல் தன்னுடைய திரை பயணத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ஓ.கே சொல்லியிருந்தார். இதனையடுத்து வருகிற ஜூலை 11ஆம் தேதி சென்னையில் திருமணம் செய்துகொள்கிறார். சென்னையை சேர்ந்த மருத்துவர் ஐஸ்வர்யாவைதான் விஜய் திருமணம் செய்துக்கொள்வதாக செய்திகள் வெளியான நிலையில் இயக்குநர் விஜய்யே அறிக்கையை வெளியிட்டார்.
 

al vijay

 

 

இதுகுறித்து அறிக்கையில், “தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு, என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தைப் பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன். எனது குடும்பத்தினர், என் வாழ்க்கைத் துணைவியாக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 
2019 ஜூலையில் முற்றிலும் ஒரு குடும்ப விழாவாக இந்தத் திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாத்தைத் தொடங்குகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கும், மேலான ஆதரவுக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
 

இந்நிலையில் நேற்று மருத்துவர் ஐஸ்வர்யா - இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரைபிரபலங்கள் இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்