Advertisment

'கோப்ரா' ரிலீஸ் எப்போது..? ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர்

director ajay gnanamuthu tweet about cobra movie release

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கோப்ரா'. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விக்ரம் 7 கெட்டப்பில் நடித்துள்ளார். செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான 'கோப்ரா' படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டேஇப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில்சமீபத்தில் தான்இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

Advertisment

இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் ஒன்று வெளியாகியுள்ளது. சமூக வலைதளத்தில் ரசிகர்கள் ஒருவர் எல்லா படமும் வெளியாகி வருகிறது. கோப்ரா படம் எப்போது வெளியாகும் என கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து," 'கோப்ரா' படத்தை மே 26 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் கழித்து இப்படம் வெளியாகவுள்ளதால்ரசிகர்கள் இயக்குநரின் பதிவைவைரல் செய்து வருகின்றனர்.

Advertisment

actor vikram cobra movie
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe