Advertisment

'ட்ரைலரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இன்னும் நிறைய இருக்கு' - எல்.கே.ஜி இயக்குனர் கே.ஆர் பிரபு

lkg

Advertisment

ஆர்.ஜே. பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தின் சிங்கிள் பாடலான 'எத்தனை காலம் தான்' பாடல் நல்ல வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது யு ட்யூப் பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இப்படத்தின் ட்ரைலர் இதுவரை மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து இப்பட இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது...

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

"ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், ட்ரைலரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் 'எல்.கே.ஜி' படத்தின் ட்ரைலரை, அதுவும் 'இளையராஜா 75' போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் ட்ரைலர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.

Advertisment

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

lkg RJ Balaji
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe