Advertisment

நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கும் தனுஷ்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு

direct telugu film starring dhanush directed by venky atluri

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ படத்திலும், ஆனந்த் எல். ராய் இயக்கும் ‘அத்ரங்கி ரே' படத்திலும்நடித்துள்ளார். இதையடுத்து நடிகர் தனுஷ், செல்வராகவன் இயக்கும் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார்.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தநிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="be9b8ce6-7f63-49f0-8068-00791ab454a4" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/AVV-article-inside-ad_16.jpg" />

Advertisment

இந்நிலையில் நடிகர் தனுஷ் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர்வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கடைசியாக வெளியான 'ரங் தே' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றியைதொடர்ந்து தனுஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். பிரபல தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கவுள்ளஇப்படம் தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாக வெளியாகவுள்ளது. இத்தகவலை தனது ட்விட்டர் பதிவின்மூலம் உறுதி செய்த நடிகர் தனுஷ் நாளை (23.12.2021)காலை 9.36 மணிக்கு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகும் எனத்தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வரும்விஜய் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படமும் தமிழ் மற்றும் நேரடி தெலுங்கு படமாகவெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

venky atluri actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe