"தளபதி விஜய் போலதான் தல தோனியும்" - பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்

Dinesh Karthik compared Dhoni with Vijay

இந்தாண்டிற்கான 15 வது ஐபிஎல் தொடர் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில்இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூரு அணிக்காகவிளையாடி வருகிறார்.தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்வதில் முக்கிய பங்கு ஆற்றி வருகிறார். அந்தவகையில்நேற்று முன்தினம் தோனி தலைமையிலான சென்னை அணிக்கும் டூ பிளசி தலைமையின் பெங்களூரு இடையே போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 173 ரன்கள் எடுத்து சென்னை அணி 174 என்ற இலக்கை நிர்ணயித்தது. இறுதியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையிலான சென்னை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. இதன் மூலம் சென்னை அணி தங்களின் 7 வது தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வதுஇடத்தில் உள்ளது.

இந்நிலையில் பெங்களூரு அணி வீரர் தினேஷ் கார்த்திக் தோனியைநடிகர் விஜய்யுடன் ஒப்பிட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தல தோனிக்கு களத்தில் வரவேற்பு பயங்கரமாக இருக்கும். அவர் நடந்து வந்தால் அரங்கமே அதிரும் பீஸ்ட் பட தளபதி விஜய் மாதிரி. சென்னை அணிக்குமிக பெரியரசிகர்கள் பட்டாளம் உண்டு" எனத் தெரிவித்துள்ளார்.

actor vijay CSK Dinesh karthik mahendra singh dhoni MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe