பல படங்களில் துணை நடிகராக நடித்து பின்னர் அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தினேஷ். இதனை தொடர்ந்து பல படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்களை ஈர்த்தவர். விசாரணை படத்தில் இவருடைய நடிப்பை பலரும் பாராட்டினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dinesh_7.jpg)
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ மக்களை கவர்ந்தது. இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்ரம் சுகுமார்தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு தேரும் போரும் என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்க, சேதுபதி படத்திற்கு இசையமைத்த ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். மேலும் அயன், வேட்டையாடு உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்த ராஜீவன் ஆர்ட் டைரக்டராகவும், மைனா சுகுமார் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்ரம் இயக்கத்தில் இது மூன்றாவது படமாகும். தற்போது ஷாந்தனுவை வைத்து இராவணக் கோட்டம் என்ற படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)