Dindigul LeDindigul Leoni criticized Vijayoni criticized Vijay

நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் தனது சினிமா விழாக்களிலும் அரசியல் மேடைகளிலும் ‘நெஞ்சில் குடியிருக்கும்’ என்று பேசத் தொடங்குவார். த.வெ.க. முதல் மாநாடு மற்றும் அண்மையில் நடந்த எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியலில் பேசுபொருளாகி பலர் விமர்சித்தும் ஆதரித்தும் பேசி வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி விஜய்யை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக நெல்லையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கூட்டத்தில் லியோனி பேசுகையில், “நேற்று கட்சி ஆரம்பித்த ஆட்களெல்லாம் இன்னும் 2 வருடத்தில் முதலமைச்சர் நாற்காலியில் வரப்போகிறேன் என சொல்லிக்கொண்டு நெஞ்சில் குடியிருக்கும் என்கிறார்கள். குடியிருக்கிறவர்கள் என்பதற்கு எப்போது வேண்டுமானாலும் காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள் என்றுதான் அர்த்தம். ஆனால், கலைஞர் என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என்று சொன்னார். உடன்பிறப்புகளே என்பது ஆண் பெண் இருபாலுக்கும் பொருந்தும். நெஞ்சில் குடியிருப்பவர்கள் வாடகைக்கும், லீஸுக்கும், ஓசிக்கும் கூட குடியிருப்பார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் ஓடிப்போய் விடுவார்கள். பணம் கொடுத்தால் இருப்பார்கள் கொடுக்கவில்லையென்றால் ஓடுவார்கள்.

தொடங்கின வார்த்தையே தவறு. நேற்று கட்சி ஆரம்பித்தவர்களெல்லாம் திராவிட கழகத்தைப் பார்த்து கை நீட்டி கேள்வி கேட்கின்ற காலம் ஆகிவிட்டது. கட்சி ஆரம்பித்த 2வது வருடத்தில் ஆட்சி பிடிப்பது நடக்கிற காரியமா? 5 நாட்களில் தொப்பை குறைய வேண்டுமா? கருப்பாக இருக்கிறீர்களா கவலை வேண்டாம்... என்பது விளம்பரங்களுக்கு மட்டும்தான் நன்றாக இருக்கும். அரசியல் இயக்கும் தொடங்கி எவ்வளவு பெரிய பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் மீயூசிக்கல் சேர் விளையாட்டு போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் ரோம் அரண்மனை கட்டவில்லை . அதுபோல் பல ஆண்டு காலம் பல வரலாற்று திருப்பு முனைகளைச் சந்தித்து கட்டப்பட்ட மாபெரும் இரும்பு கோட்டைதான் தி.மு.க. என்பதை அவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்றார்.