Dindigul I.Leoni Comedy Speech   - Azhagiya kanne movie function

Advertisment

அழகிய கண்ணே பட விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் பல்வேறு சினிமா ஆளுமைகள் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பட்டிமன்ற நடுவர் மற்றும் நடிகருமான திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டார்.

நிகழ்வில் திண்டுக்கல் லியோனி பேசியதாவது, “பட்டிமன்றத்தில் காதல் திருமணம் சிறந்ததா, நிச்சயிக்கப்பட்ட திருமணம் சிறந்ததா என்கிற தலைப்பு அடிக்கடி வைக்கப்படும். பொதுவாக வயதானவர்கள் அனைவரும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் சிறந்தது என்று தீர்ப்பு வழங்குவார்கள். நான் மட்டும்தான் காதல் திருமணம் சிறந்தது என்று தீர்ப்பு வழங்குவேன். இதற்காக நான் பலரிடம் திட்டு வாங்குவேன். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இங்கு வந்துள்ளார். படையப்பா படத்தில் ரஜினியோடு அவர் சூப்பராக டான்ஸ் ஆடியது இன்றும் நினைவில் இருக்கிறது. அவருடைய பெரிய ரசிகன் நான்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ என்னுடைய க்ளாஸ்மேட். விஜய்யை வைத்து செந்தூரப்பாண்டி படத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து விஜய்யை ஒரு ஹீரோவாக்கியது அவர் தான். அந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னுடைய பட்டிமன்றம் தான் நடந்தது. பொதுவாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த நடிகைகள் தமிழை ஒழுங்காகப் பேச மாட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் ஹீரோயின் சஞ்சிதா அவ்வளவு அழகாக தமிழ் பேசினார்.

Advertisment

ஒரு நடிகரிடம் நான் பேச வேண்டும் என்று பல மாதங்களாக அவருக்கு மெசேஜ் அனுப்பி வருகிறேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஆனால் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருந்தாலும், விஜய் சேதுபதி எளிமையான மனிதராக இருக்கிறார். என்னுடைய மகன் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் நான் கேட்டதற்காக கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு அவர் ஒப்புக்கொண்டார். நடிகர் சூரியும் அதுபோன்று எளிமையானவர் தான்.

எமர்ஜென்சி காலத்தில் நடிகவேள் எம்.ஆர். ராதா அவர்களைக் கைது செய்தனர். அந்த நேரத்தில் கூட அவர் தனது நகைச்சுவையை வெளிப்படுத்தினார். அவர் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய குரலில் தான் நான் முதல் முதலில் மிமிக்ரி செய்தேன். இந்தப் படத்தில் ஒரு நல்ல மெசேஜ் இருக்கிறது.