dimple kapadia

Advertisment

‘டன்கிரிக்' படத்தைத் தொடர்ந்து, பிரம்மாண்ட பொருட்செலவில் கிறிஸ்டஃபர் நோலன் இயக்கியிருக்கும் படம், 'டெனட்'. இந்தப் படத்தில், ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பேட்டின்ஸன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும், பிரபல இந்தி நடிகை டிம்பிள் கபாடியாவும் டெனட் படத்தில் நடித்துள்ளார்.

கரோனா தொற்றால், பலமுறை வெளியீட்டுத் தேதி மாற்றப்பட்டு, இறுதியாக ஆகஸ்ட் 26 ஆம் தேதி, அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட சிலநாடுகள் தவிர்த்து, 70 நாடுகளில் 'டெனட்' திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்தநிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'டெனட்' திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகவுள்ளது.

இதனையொட்டி, படத்தின் இயக்குனர் கிறிஸ்டஃபர் நோலன், இந்திய ரசிகர்கள் குறித்து பேசிய வீடியோ வெளியாகி வைரலானது.

Advertisment

மேலும்இந்தியாவில், இப்படத்தின் புரொமோஷனுக்காக படத்தில் நடித்த டிம்பிள் கபாடியா பேட்டி ஒன்றில் பேசும்போது, முதன் முதலில் கிறிஸ்டஃபர் நோலன் படத்தில் நடிப்பதற்கான ஆடிஷன் அழைப்பு வந்திருக்கிறது என்று சொன்னபோது, யாரோ கேலி செய்கிறார்கள் என்று நினைத்ததாகக் கூறியுள்ளார்.