dimple hayathi police officer issue

தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை டிம்பிள் ஹயாதி தமிழில் பிரபுதேவா நடித்த 'தேவி 2' படத்தில் நடித்துள்ளார். மேலும் விஷால் நடித்த 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்த இவர், தனுஷ் இந்தியில் நடித்த 'அந்த்ராங்கி ரே' படத்திலும் நடித்துள்ளார்.

Advertisment

ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த டிம்பிள் ஹயாதி, ஹைதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார். அதே கட்டடத்தில் டிசிபி ராகுல் ஹெக்டே என்பவர் வசித்து வருகிறார். கடந்த மாதம்டிசிபி ராகுல் ஹெக்டே, நடிகை டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் டேவிட் இருவரும் வேண்டுமென்றே தனது வாகனத்தை இடித்து சேதப்படுத்தியுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Advertisment

அதன் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், இருவரும் வண்டியை மோதியுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் டிம்பிள் ஹயாதி மற்றும் அவரது நண்பர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகை மற்றும் அவரது நண்பர் உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அதில், "டிசிபி ராகுல் ஹெக்டேவின் அழுத்தத்தால் தான் என் மீது தவறான வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மனுவானது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர்இந்த வழக்கு தொடர்பாக டிம்பிள் ஹயாதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத்தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், நடிகையின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. மேலும் விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

Advertisment