கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் டி.இமான்

d.imman received  Honorary Doctorate from the International Anti Corruption and Human Rights Council

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் டி.இமான். தொடர்ந்து, ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக தற்போது வலம் வருகிறார். அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="4bbff492-1e9d-446e-86ba-dfd0cef22c58" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-x-300_7.jpg" />

மேலும் தன் படங்களின் மூலம் பல திறமையான இசைக்கலைஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இப்போது சசிகுமார் நடிப்பில் உருவாகும் 'காரி', விஜய் ஆண்டனி மற்றும் சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் 'வள்ளி மயில்' உள்ளிட்ட சில படங்களில் இசையமைத்து வருகிறார்.

இதனிடையே சமூக சர்வதேச ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில், இசையமைப்பாளர் இமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நிறுவனத்திடமிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதில் மகிழ்ச்சி" எனக் குறிப்பிட்டு அதற்கான சான்றிதழ்களை பகிர்ந்துள்ளார். இசைத்துறையில் பங்காற்றியதற்காக இமானுக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் இமானுக்கு தங்களது வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்துவருகின்றனர். டி.இமான், முன்னதாக சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பாக கெளரவ டாக்டர் பட்டம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

d.imman
இதையும் படியுங்கள்
Subscribe