vgdgedgd

‘தேவதாஸ்’, ‘கங்கா யமுனா’, ‘ஆன், தஸ்தான்’, ‘மொகல்-இ-அஸாம்’ உள்ளிட்ட படங்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பழம்பெரும் ஹிந்தி நடிகர் திலீப்குமார் வயது மூப்பு காரணாமாக காலமானார். அவருக்கு வயது 98. நடிகர் திலீப் குமார் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மும்பையில் உள்ள ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். தொடர்ந்து அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று (07.07.2021) காலை 7.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி திலீப் குமார் காலமானார்.

Advertisment

1944இல் சினிமாவில் அறிமுகமான இவர், இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவராக உருவெடுத்தார். 1950, 60களில் பாலிவுட்டின் முடிசூடா மன்னனாக திகழ்ந்த அவர், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். 1994இல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மேலும், இந்தியாவின் உயரிய விருதுகளான பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ள இவரதுமறைவுக்குத் திரைப் பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.