Dil Raju to release Ajith Kumar Thunivu in Telugu

மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும்படம் 'துணிவு'. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் 'சில்லா சில்லா', 'காசேதான் கடவுளடா', 'கேங்ஸ்டா' உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டுவெளியாகவுள்ள நிலையில், ஒரு புதிய அப்டேட் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் 'துணிவு' படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு 'தேகிம்பு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. அப்படத்தை 'வாரிசு' பட தயாரிப்பாளர் தில் ராஜுஆந்திராவில் உள்ள இரண்டு பகுதிகளில் வெளியிடுகிறார். தில் ராஜு சமீபத்திய பேட்டி ஒன்றில், "தமிழ்நாட்டை பொறுத்தவரை விஜய்தான் நம்பர் 1 ஹீரோ. அதனால் வாரிசு படத்திற்குத்தான்அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது அஜித்தின் துணிவு படத்தை தெலுங்கில் வாங்கி வெளியிடவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'வாரிசு' படம் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.