Advertisment

விஜய்யின் பாடி லாங்குவேஜ் குறித்த பேச்சு; ரசிகர்களை கோபப்படுத்திய தில் ராஜு

dil raju imitates his varisu speech in Balagam Pre Release Event

விஜய் நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான 'வாரிசு' படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் ரூ. 250 கோடி ஈட்டியதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்திருந்தார். வாரிசுபட இசை வெளியீட்டு விழாவில் இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக "டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு, ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு, பாடி லாங்குவேஜ் வேணுமா, பாடி லாங்வேஜ் இருக்கு" என்று பேசிய வசனம் ட்ரெண்டானது.

Advertisment

அதே பாணியில் தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் தில் ராஜு பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தெலுங்கு படமான 'பாலகம்' படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, "தமிழ்நாட்டுல என் பேச்சு மிகவும் பிரபலமாகியிருக்கு. இந்த சினிமால பைட்ஸ் இல்ல, இந்த சினிமால டான்ஸ் இல்ல, இந்த சினிமால விஜய் சார் பாடி லாங்குவேஜ் இல்ல, ஆனா இந்த படத்துல சூப்பர் எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு, சூப்பர் எமோஷன்ஸ் இருக்கு" என்றார்.

Advertisment

இதில் விஜய் குறித்து பேசியிருப்பது விஜய் ரசிகர்களை சற்று கோபப்படுத்தியுள்ளது. "விஜய்யின் பாடி லாங்குவேஜ் இல்ல, ஆனா எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு..." என்று அவர் பேசியதை பார்த்த ரசிகர்கள் அப்போ வாரிசு படம் எண்டெர்டெயின்மெண்ட் இல்லாத படம் என சொல்கிறாரா என்று அவருக்கு எதிராக கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர் "தன்னைத் தானேகிண்டலடிக்கும் வகையில் அவரே தன்னை கிண்டலடித்துள்ளார்" என ஆதரவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

dil raju varisu movie actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe