Advertisment

dil raju about varisu telugu release

விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க முக்கியக் கதாபாத்திரங்களில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, சம்யுக்தா, ஷாம், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தில்ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் அனைத்தும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் பொங்கலை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்த நிலையில் தெலுங்கில் 'வாரிசு' படம் 14ஆம் தேதி வெளியிடவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தெலுங்கில்பெரிய ஹீரோக்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்கள் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் அவர்களுக்கு வாரிசு படம் போட்டி இல்லை.முதலில் மக்கள் அந்தப் படங்களைப் பார்த்துவிட்டு வாரிசு தெலுங்கு படத்திற்கு வரட்டும். தமிழில் 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு கண்டிப்பாக வெற்றி பெறும்.

அந்த வெற்றியோடு தெலுங்கில் வெளியானால் வரவேற்பு இன்னும் அதிகமாக இருக்கும். அதேபோல தான் இதற்கு முன்னாடி வெளியாகி வெற்றி பெற்ற லவ் டுடே, காந்தாரா உள்ளிட்ட படங்களும்மற்ற மொழிகளில் வெற்றி பெற்றுபின்பு தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றது. வாரிசு ஒரு குடும்ப பொழுதுபோக்குபடம். நிச்சயம் தெலுங்கிலும் வெற்றி பெறும்" என்றார்.