santhanam

‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்திற்குப் பிறகு கார்த்திக் யோகி இயக்கியுள்ள 'டிக்கிலோனா' படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இப்படத்தில் யோகி பாபு, ஆனந்தராஜ், அனகா, ஷெரின், முனீஸ்காந்த், 'நான் கடவுள்' ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, யூடியூப் பிரசாந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் வழங்க, சினீஷ் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

Advertisment

இப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. சந்தானத்தின் அதிரடி பன்ச் வசனங்கள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment