Advertisment

இந்தியாவின் ஸ்டார் பந்துவீச்சாளருடன் சந்தானம் நடிக்கும் படத்திற்கு பூஜை!

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் 'டிக்கிலோனா'. சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் நட்பேதுணை அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஷிரின் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Advertisment

dikki

மேலும் மிக முக்கிய கதாபத்திரத்தில் இந்திய அணியின் சூழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் நடிக்க, யோகிபாபு, ஆனந்த் ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த், சித்ரா லக்ஷ்மணன், நிழல்கள் ரவி, ஷாரா அருண் அலெக்‌ஸாண்டர், இட்டிஸ் பிரசாந்த் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளனர். பல வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதையில் உதவியாக இருந்த கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. பூஜையில் படத்தின் நாயகன் சந்தானம், நாயகிகள் அனகா, ஷிரின், தயாரிப்பாளர்கள் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ், சோல்ஜர் பேக்டரி சினிஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது.

Advertisment

dikkiloona harabhajan singh Santhanam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe