'Did we go to politics ..' - 'don' movie trailer

Advertisment

'டாக்டர்' பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டான்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'லைக்கா ப்ரொடக்ஷன்ஸ்' தயாரித்துள்ள இப்படத்தை 'ரெட் ஜெயண்ட் மூவிஸ்' நிறுவனம் வெளியிடுகிறது. மே மாதம் 13-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது. ஏற்கனவே வெளியான இப்படத்தின் மூன்று பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘டான்’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. கல்லூரி வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை காமெடி கலந்து கூறுவது போல் அமைந்துள்ளது. மேலும் இந்த ட்ரைலரில் சிவகார்த்திகேயன் ஒவ்வொரு தருணத்திலும் நாம கிரிக்கட்டர் ஆகிடுவோமா, கேங்ஸ்டர் ஆகிடுவோமாஎன்று கூறும் வசனம் ரசிகர்களை ரசிக்கும் படி வைத்துள்ளது. இந்த ட்ரைலர் வெளியான சில நிமிடங்களிலே 4லட்சம் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டாகி வருகிறது.