சமீப காலங்களாக குறிப்பிட்ட இடைவெளியில் பிராமிசிங்கான வெப் தொடர்களை வெளியிட்டு வரும் ஜீ 5 ஒ டி டி தளம் அடுத்ததாக வேடுவன் என்ற தொடரை ரிலீஸ் செய்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் ரசிகர்களிடையே எந்த அளவு வரவேற்பு பெற்று இருக்கிறது?
என்கவுண்டர் போலீசாக இருக்கும் கண்ணா ரவி அண்டர் கிரவுண்ட் போலீசாக இருந்து கொண்டு பல்வேறு வேடமிட்டு பல்வேறு ரவுடிகளை என்கவுண்டரில் போட்டு தள்ளுகிறார். போலீஸ் கைகாட்டி இடத்தில் என்ன ஏது என்று கூட கேட்காமல் என்கவுண்டர்களை சரமாரியாக செய்து வரும் இவருக்கு அடுத்ததாக முன்னாள் ரவுடியின் இந்நாள் அரசியல்வாதியும் ஆன சஞ்சீவ் வை என்கவுண்டர் செய்யும் அசைன்மென்ட் கண்ணா ரவிக்கு ஒப்படைக்கப்படுகிறது. அவரும் சஞ்சீவை போட்டு தள்ள அவர் ஊருக்கு செல்கிறார். சென்ற இடத்தில் தன் முன்னாள் காதலி ஆன வினுஷாவின் கணவர் தான் சஞ்சீவ் என கண்ணா ரவிக்கு தெரிய வருகிறது. அதேபோல் சஞ்சீவ் அந்த ஊரில் மிகவும் மதிக்கத்தக்க மனிதராக இருப்பதும் அவருக்கு அந்த ஊரே சப்போர்ட்டாக இருப்பதும் கண்ணா ரவிக்கு தெரிய வருகிறது. இதனால் மிகுந்த மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார் கண்ணா ரவி. ஒரு பக்கம் தன் கடமையை செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் தன் முன்னாள் காதலியின் நிலையை கருத்தில் கொண்டு அதே சமயம் நல்லவராக இருக்கும் சஞ்சீவை எப்படி என்கவுண்டர் செய்வது என தர்ம சங்கடம் இன்னொரு பக்கம். இப்படி பல்வேறு மன குழப்பங்களுக்கிடையே இருக்கும் கண்ணா ரவி சஞ்சீவை என்கவுண்டர் செய்தாரா, இல்லையா? என்பதே இந்த வெப் தொடரின் மீதி கதை.
கையை நீட்டிய இடத்தில் எல்லாம் என்ன ஏது என்று கூட கேட்காமல் சரமாரியாக என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரி ஒரு நிமிடம் சுதாரித்துக் கொண்டு யோசித்து நிறுத்தி நிதானமாக தான் என்ன செய்கிறோம் என உணர்ந்து செயல்பட்டால் இந்த சமூகத்தில் அது எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற இன்றைய சமூகத்துக்கு அவசியமான கதையை எடுத்துக்கொண்டு அதை திறன் பட கையாண்டு சிறப்பான வெப் சீரிஸாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பவன் குமார். எப் சீரிஸ் ஆரம்பித்தது முதல் இறுதி வரை விறுவிறுப்பாகவும் அதேசமயம் அழுத்தமான திரை கதை அம்சம் கொண்ட திருப்பங்கள் நிறைந்த படமாகவும் நகர்வது ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரவழைத்து ரசிக்க வைத்திருக்கிறது. அடுத்தடுத்து நடக்கும் காட்சிகளை ஓரளவு யூகிக்கும்படி இருந்தாலும் அதனுள் சில பல திருப்பங்களை கொடுத்து ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிக்கும்படியாக கொடுத்து இந்த வெப் தொடரை கரை சேர்த்திருக்கிறார். கதை ஆரம்பித்து சிறிது நேரம் சீரியல் போல் சென்றாலும் போகப் போக வேகம் எடுத்து கதைக்குள் சென்ற பிறகு விறுவிறுப்பான கதை அம்சம் கொண்ட வெப் சீரிஸ் ஆக மாறி பார்ப்பவர்களுக்கு ஒரு நல்ல கதையம்சம் கொண்ட படமாக இது அமைந்திருக்கிறது. அதுவும் குறுகிய நேரமே ஓடும் இந்த வெப் சீரிஸ் பார்ப்பவர்களுக்கு கனக்கச்சிதமாக அமைந்து அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் கண்ணா ரவி சிறப்பாக நடித்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். கூலி படத்தில் நாகார்ஜுனாவின் மகனாக வரும் இவர் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை மட்டும் கொடுக்காமல் தோற்றத்திலும் மிடுக்காக இருந்து கவர்ந்திருக்கிறார். முன்னாள் ரவுடி அரசியல்வாதியாக வரும் சஞ்சீவ் சில இடங்களில் இளைய தளபதி விஜய் போல் தோன்றுகிறார். பல இடங்களில் தனது டிரேட் மார்க் நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் அவருக்கு நல்ல கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. அதை சிறப்பான முறையில் செய்து ரசிக்க வைத்திருக்கிறார். பிக் பாஸ் வினுஷா நாயகியாக நடித்து கவனம் பெற்று இருக்கிறார். மிகவும் யதார்த்தமான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார். இவருக்கும் கண்ணா ரவிக்கும் மான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கும் ரேகா நாயர் உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
விபின் பாஸ்கர் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பு. சீனிவாசன் தேவராஜ் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சீரியல் போல் இருந்தாலும் போகப் போக விறுவிறுப்பாக சஸ்பென்ஸ் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இந்த வேடுவன் வெப் சீரிஸ் கண்டிப்பாக டிஸ்அப் பாயிண்ட் செய்யவில்லை.
வேடுவன் - வேட்டைக்காரன்!