Advertisment

75 வயதில் திருமணம்...  மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர்!

பெங்கால் சினிமாத்துறையை சேர்ந்த நடிகர் திபாங்கர் தே மற்றும் நடிகை டொலோன் ராய் நீண்டகாலமாக திருமணம் செய்துக்கொள்ளமால ஒரு வீட்டில் இணைந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இவ்விருவரும் கடந்த 16ஆம் தேதி திருமணம் செய்துகொண்டிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

bengal

பல வருடங்களாக இந்த இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். நடிகர் திபாங்கரிடம் டோலோன் ராய் பற்றி எந்த பேட்டியில் கேள்வி எழுப்பினாலும் யோசிக்காமல் நாங்கள் இருவரும் லிவிங் டு கெதர் உறவு முறையில் இருக்கின்றோம் என்பதை வெளிப்படையாக சொல்வார்.

Advertisment

திபாங்கருக்கு வயது 75, டொலோனுக்கு வயது 49 இந்நிலையில் இவ்விருவரும் திடீரென தங்களின் உறவினர்களையும் பெங்கால் சினிமாத்துறையின் பிரபலங்களை அழைத்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். தற்போதுவரை இவ்விருவரும் பெங்கால் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பிஸியாக நடித்து வரும் பிரபலங்கள்.

இந்த நிலையில், இன்று திடீரென திபாங்கர் தே மருத்துவமனையில் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.16ஆம் தேதி அவருக்கு திருமணம் நடபெற்ற நிலையில், 17ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அவரின் ரசிகர்களுக்கு திரைத்துறையினருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

bengal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe