vikram

Advertisment

இயக்குனர் கவுதம் மேனன் வெகு நாட்களாக இயக்கிவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டு டீசர்கள் ஆரம்பத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதன் மூன்றாவது டீசரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிகளாக நடிக்கின்ற இப்படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், சுரேஷ் மேனன், வம்சி கிருஷ்ணா, சலீம் பெய்க், சதீஷ் கிருஷ்ணன், முன்னா சிமோன், மாயா எஸ்.கிருஷ்ணன், ஷ்ரவந்தி சாய்நாத், டிடி மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்று காலை வெளியான படத்தின் டீசருக்கு இதுவரை சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இயக்குனர் கவுதம் மேனன் தன் ட்விட்டர் பக்கத்தில் இந்த டீசர் குறித்து பதிவிட்டுள்ளார். அதில்.... "ஒவ்வொரு படத்திற்கும் ஒரு பயணம் உண்டு. இந்த படத்திற்கும் தான் நீண்ட, அழகான பயணம் இருக்கிறது. நமது எதிர்பார்ப்பு பெரிதாகவும், வித்தியாசமாகவும் இருக்கும் போது நேரம் அதிகமாக தேவைப்படுகிறது. அது எளிதாக முடிந்து விடாது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. விக்ரம் சார் இது உங்களுக்கான படம்" என பதிவிட்டுள்ளார்.

vikram

Advertisment

மேலும் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த 'சாமி ஸ்கொயர்' படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதில் விக்ரம் பேசும் பன்ச் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான உணர்வுகளை ஏற்படுத்தின. இதை மறக்கச் செய்யத்தான்துருவநட்சத்திரத்தின் இரண்டாவது டீசரை தற்போது வெளியிட்டுள்ளதாக திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.