பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அந்த சமயத்தில் அவருடைய மனைவி மேக்னா ராஜ் கர்ப்பமாகவும் இருந்தார்.
இந்நிலையில் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டார். சிரஞ்சீவி சார்ஜா, கடைசியாக நடித்துள்ள ராஜமார்த்தாண்டா திரைப்படத்திற்கு துருவா சார்ஜாதான் டப்பிங் பேசுகிறார்.
இதுகுறித்து பேசியுள்ளதுருவா சார்ஜா, “நான் சிரஞ்சீவி சார்ஜாவின் படமான 'ராஜமார்த்தாண்டா' என்ற படத்தில் டப்பிங் பேச ஒப்புக்கொண்டேன். அப்போது அவரது காட்சிகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன். அதனால் சில காலம் கழித்து மீண்டும் டப்பிங் பேசலாம் என்று முடிவு செய்தேன்”என்று கூறியுள்ளார்.