Advertisment

உதயநிதியால் மீண்டும் ஜொலிக்கும் நட்சத்திரம் - வெளியான விக்ரம் பட அப்டேட்

Dhruva Natchathiram movie shoot revive soon

கோப்ரா, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ள விக்ரம் அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் 61 படத்தில் நடிக்கவுள்ளார். பிரிட்டிஷ் காலகட்டத்தில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ள இப்படத்தின் பணிகள் பூஜையுடன் சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதனிடையே நடிகர் விக்ரம் இயக்குநர் கெளதம்மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் சில பிரச்சனை காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படாமல் இருந்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="45f8932e-6b5a-4d31-9cc6-8dc0972bed49" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Poikaal-Kuthirai-500-X-300-Article-Ad_2.jpg" />

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. சியான் 61 படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னரே இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்க விக்ரம் திட்டமிட்டுள்ளாராம். அதற்காக நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் படத்திற்காக 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம். இதனை உறுதி செய்யும் வகையில் கெளதம் மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்ரமுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கோப்ரா படத்தைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம் படத்தின் வெளியிட்டு உரிமையையும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும், அதனால்தான் இப்படத்தின் பணி மீண்டும் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

actor vikram Dhruva Natchathiram gautham menon Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe