விக்ரம் தற்போது 'கோப்ரா' படத்தில் நடித்து வரும் நிலையில் இவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p4', [300, 250], 'div-gpt-ad-1584956702125-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p2', [300, 250], 'div-gpt-ad-1584957496255-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
விக்ரமின் 60ஆவது படமாக உருவாகும் இப்படத்தையும் 'கோப்ரா' படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரமும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. 'ஆதித்ய வர்மா' படம் மூலம் கவனிக்கத்தக்க நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்த துருவ் விக்ரம் இந்தப் படத்தில் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் புதிய கூட்டணி தகவலால் விக்ரம் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.