dhrishyam

Advertisment

பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் 'த்ரிஷ்யம்'. ஆனால், முதலில் இப்படம் மலையாளத்தில் ஜீது ஜோஸப் இயக்கத்தில் எடுக்கப்பட்டது. இதில் மோகன் லாலுக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். பலரையும் த்ரில்லாக்கிய இந்த படம், 50 கோடி வரை வசூலை ஈட்டியது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷூட்டிங் அண்மையில் கேரளாவில் தொடங்கியது. இதிலும் மோகன் லாலுடன் நடித்த அதே நடிகர்கள் நடிக்கின்றனர். கேரள அரசாங்கத்தின் சுகாதார விதிமுறைகளை கடைபிடித்து இந்த படத்தின் பிரம்மாண்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

அண்மையில் படக்குழுவினருக்கு, படத்தின் ஹீரோ மோகன்லால் பிரியாணி விருந்து அளித்தார். அப்போது அவர் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது வைரலானது.

Advertisment

செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால், 46 நாட்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதற்கு மோகன்லால், மீனா உள்ளிட்ட ஒட்டுமொத்தப் படக்குழுவினரின் ஒத்துழைப்பே காரணம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.