Advertisment

"இப்படத்தை என் மகளுடன் சேர்ந்து பார்க்க முடியும்" - தோனி

dhoni speech at lgm movie audio launch

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற படத்தயாரிப்பு நிறுவனத்தைதொடங்கிமுதல் தமிழ்ப்படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married - LGM) என்ற தலைப்பில் ஒரு படத்தை அந்நிறுவனம்தயாரித்துள்ளது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

Advertisment

காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் கலந்துகொண்ட தோனி பேசுகையில், "நான் என் மனைவிக்கு எந்த கெட்ட வார்த்தையும் கற்றுக் கொடுக்கவில்லை. அதற்கு எளிமையான காரணம், எனக்கு தமிழில் கெட்ட வார்த்தைகள் தெரியாது. இப்படத்தை என் மகளுடன் சேர்ந்து பார்க்க முடியும். அவளுக்கு எட்டரை வயது.அவளுக்கு கேள்விகள் இருக்கும். ஆனாலும் பார்க்கலாம்.

Advertisment

இப்படத்தின் யோசனையை சாக்‌ஷிஎன்னிடம் சொன்னபோது, நாம் இப்படத்தை தமிழில் உருவாக்குகிறோம். இது விதி என்று நான் நம்புகிறேன்என்றேன். ஏனென்றால் எனது டெஸ்ட் அறிமுகம் சென்னையில் தான் நடந்தது. எனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரும் சென்னையில் தான்.கிரிக்கெட்டைபொறுத்தவரையில் நான் பெருமைப்படக்கூடிய நிறைய விஷயங்கள் சென்னையில் நடந்தன. 2008 இல் ஐபிஎல் தொடங்கியவுடன்என்னை தமிழகம் தத்தெடுத்தது என்பதை நான் மறந்துவிடக் கூடாது" என்றார்.

harish kalyan MS Dhoni sakshi dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe