Advertisment

வெப் சீரிஸ் தயாரிக்கும் தோனி! 

dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி அண்மையில் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார்.

Advertisment

தற்போது அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டும் வெற்றிபெற்று பாயிண்ட்ஸ் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் தோனியின் பொழுதுபோக்கு நிறுவனம் புதிதாக வெப் சீரிஸ் ஒன்றை தயாரிக்க உள்ளது. புதுமுக எழுத்தாளர் எழுதியுள்ள அந்த புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மித் மற்றும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் வகையை சேர்ந்த கதை மிகவும் த்ரில்லிங்காக இருக்கும் என்று தோனியின் மனைவியும், தோனி தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக மேலாளருமான சாக்‌ஷி தெரிவித்துள்ளார். மேலும், இந்த படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார்கள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தோனியின் இந்நிறுவனம் ரோர் ஆஃப் லயன்ஸ் என்னும் ஆவணப் படத்தை தயாரித்திருந்தார். சிஎஸ்கே அணி ஸ்பாட் ஃபிக்ஸிங் பிரச்சனை காரணமாக இரண்டு வருடங்கள் ஐபிஎல் போட்டியில் விளையாட தடை செய்யப்பட்டது. அதிலிருந்து சிஎஸ்கே எப்படி மீண்டு வந்தது என்பதை ஆவணப்படமாக இயக்குனர் கபீர் கானை வைத்து உருவாக்கப்பட்டது.

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe