Advertisment

தோனி தயாரிக்கும் 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

dhoni producer lgm movie wrapped

Advertisment

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டை தாண்டி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முதல் தமிழ்ப்படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது.

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததை ஒரு பிரத்யேக நிகழ்வு நடத்திக் கொண்டாடியுள்ளது. இதில் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து படத்தின் இறுதிக் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

Dhoni harish kalyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe