Skip to main content

தோனி தயாரிக்கும் 'எல் ஜி எம்' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published on 03/05/2023 | Edited on 03/05/2023

 

dhoni producer lgm movie wrapped

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட்டை தாண்டி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முதல் தமிழ்ப் படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது. 

 

இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகிறது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு முடிந்ததை ஒரு பிரத்யேக நிகழ்வு நடத்திக் கொண்டாடியுள்ளது. இதில் படத்தில் பணியாற்றிய பல கலைஞர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதிக் கட்டப் பணி தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீசர், ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்லோ பவுன்சர்களால் திணறிய சென்னை; சன் ரைசர்ஸ் எளிதில் வெற்றி!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Chennai choked by slow bouncers; Sunrisers win easily!

ஐபிஎல் 2024இன் 18ஆவது லீக் ஆட்டம் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணிக்கு ரச்சின் 12 ரன்னிலே வெளியேறினார். பின்னர் கேப்டன் ருதுராஜுடன் இணைந்த ரஹானே பொறுமையாக ஆடினார். ருதுராஜ் 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சிவம் துபே அதிரடியாக ஆடினார். பொறுமையாக ஆடிய ரஹானே 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜடேஜாவுடன் சிவம் துபேவும் இணைந்து அவ்வப்போது அதிரடி காட்டினர். ஆனாலும், ஹைதராபாத் அணி வீரர்களின் ஸ்லோ பவுன்சர்களால் சென்னை அணி வீரர்கள் நினைத்தபடி அதிரடியாக ஆட முடியவில்லை. ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்த மைதானம் தானா என்று சந்தேகம் எழும் அளவுக்கு மைதானத்தின் தன்மை மாறியிருந்தது. சிவம் துபே 45, ஜடேஜா 31, மிட்செல் 11 ரன்கள் உதவியுடன் 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஓரளவு எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக், ஹெட் துணை அதிரடி துவக்கம் தந்தது. முக்கியமாக அபிஷேக் ஷர்மா தனது அதிரடியான பேட்டிங்கால் சென்னை பவுலர்களை திகைக்க வைத்தார். 12 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 37 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போட்டார்.

ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த மார்க்ரம் நிதானமாக ஆடி அரைசதம் எடுத்து ஆட்டமிழந்தார். அஹமது 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கிளாசென் 10, நித்திஷ் 14 ரன்கள் உதவியுடன் 18.1 ஓவர்களில் 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆரம்பத்திலேயே அதிரடியாய் ஆடி ஹைதரபாத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்ட அபிஷேக் ஷர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி 4 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

Next Story

‘சாச்சிட்டாளே... ஆள சாச்சிட்டாளே...’ - இவானா (புகைப்படங்கள்)

Published on 28/03/2024 | Edited on 28/03/2024

 

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நாச்சியார் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. தொடர்ந்து ஹீரோ, லவ் டுடே, எல்.ஜி.எம், மதிமாறன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இப்போது ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள கள்வன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அவரது பிரத்யேக புகைப்படங்கள்.