/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/480_11.jpg)
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டை தாண்டி 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனம் முதல் தமிழ்ப் படமாக 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) என்ற தலைப்பில் ஒரு படத்தைத் தயாரித்து வருகிறது.
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இப்படம் காமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. டீசரை பார்க்கையில், கதாநாயகனும் கதாநாயகியும் திருமணம் செய்துகொள்வதற்காக ஒரு முயற்சியை மேற்கொள்கின்றனர். அந்த முயற்சி வெற்றி பெற்றதா என்பதை காமெடிகலந்து சொல்லியிருப்பதாகத்தெரிகிறது. இதில் வெங்கட் பிரபுவும் நடித்துள்ளார். டீசரில் விடிவி கணேஷ் போலீசாக வரும் நிலையில் அவரிடம் 'எனக்கு வேற வழி தெரியல சார்' என்று ஹரிஷ் கல்யாண் பேசும் வசனம் ரசிக்கும் படியாக இருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)