Dhoni gifted  cricket bat to Yogi Babu

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் பயணித்து வருபவர் யோகிபாபு. அந்த வகையில் தற்போது ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் 'ஜெயிலர்', பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார்.

Advertisment

மேலும் கதாநாயகனாக ஆர்.கண்ணன் இயக்கும் அடுத்த படத்திலும் ஜான்சன் இயக்கும் 'மெடிக்கல் மிராக்கில்' படத்திலும் நடிக்கிறார். இதனிடையே ஓவியாவுடன் இணைந்து 'காண்ட்ராக்டர் நேசமணி' மற்றும் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருடன் இணைந்து 'லோக்கல் சரக்கு' உள்ளிட்ட சில படங்களில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்ட விளையாட்டை நன்றாக விளையாடி வரும் யோகி பாபுவுக்கு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, அவரது கையெழுத்துடன் கூடிய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதனைத்தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு. மேலும் "தோனி அவர் நெட்டில் விளையாடிய பேட்டை பரிசளித்துள்ளார். உங்கள் கிரிக்கெட் நினைவுடன் சினிமா நினைவாற்றலையும் எப்போதும் ரசிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

தோனி, தனது தயாரிப்புநிறுவனம் மூலம்முதல் படமாக தமிழில் ஹரிஷ் கல்யாணைவைத்து தயாரித்து வரும் 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) படத்தில் யோகி பாபுமுக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விஜய்யும் யோகி பாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.