bgsrgsrg

Advertisment

‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் சென்ற ஆண்டு தன் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார் இதைத் தற்கொலை என உறுதிப்படுத்தினர். இது ஹிந்தி திரையுலகில் மிகுந்த அதிர்ச்சியையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் ‘எம்.எஸ்.தோனி’, ‘கேசரி’ போன்ற படங்களில் நடித்த நடிகர் சந்தீப் நஹார் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 32 வயதான அவரின் மரணத்தை மும்பை போலீசார் நேற்று (15.02.2021) மாலை உறுதிப்படுத்தினர்.

அவர் இந்தத் தற்கொலைக்கு காரணம் தனிப்பட்ட குடும்பப் பிரச்சினைகள் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் இறப்பதற்கு முன் இதுகுறித்தப்பதிவும் மற்றும் விடியோவாகவும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இது பாலிவுட் பட உலகில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியின் நண்பராக சந்தீப் நஹார் நடித்துள்ளார். மேலும் அக்‌ஷய் குமாரின் ‘கேசரி’ படத்திலும் படா சிங்காக நடித்துள்ளார்.