தகவல் உறுதி - தோனி தயாரிக்கும் தமிழ் படத்தின் ஹீரோ அறிவிப்பு

Dhoni Entertainment first tamil project hero announced

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனிஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். இதனிடையே விவசாயம் செய்வதிலும்விளம்பரங்களில் நடிப்பதிலும்கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் 'ரோர் ஆஃப் லயன்' என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு 'ப்ளேஸ் டு க்ளோரி' (Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளை தயாரித்துள்ளது.

கடந்த அக்டோபரில் 'தோனி எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தனது முதல் படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. மேலும் இப்படம்தோனியின் மனைவி சாக்ஷி சொன்ன குடும்ப கதையை இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்குவார் எனவும்தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இப்படத்தில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாணம் நடிக்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அதுஉறுதியாகியுள்ளது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக 'லவ் டுடே' படத்தின் மூலம் பிரபலமடைந்த இவானா நடிக்கிறார். மேலும் நதியா மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகதெரிவித்த படக்குழு படத்துக்கு 'லெட்ஸ் கெட் மேரீட்' (Lets Get Married) என தலைப்பு வைத்துள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி பலரதுகவனத்தை ஈர்த்து வருகிறது.

harish kalyan MS Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe