Advertisment

தோனி, அஜித், டாம் குரூஸ் டச்சில் ‘தி கோட்’ ட்ரைலர்  

dhoni ajith tom cruise reference in vijay the goat trailer

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் என பலர் நடித்து வரும் இப்படம் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்கிலும், ஐமேக்ஸ் திரைக்கேற்பவும் வெளியாகவுள்ளது.

Advertisment

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தோனி, டாம் குரூஸ், அஜித் போன்ற பிரபலங்களின் ரெஃபரன்ஸ் இடம்பெறச் செய்து ரசிகர்களின் பல்சை பிடித்துள்ளார் வெங்கட் பிரபு. அந்த வகையில், தோனியின் பிரபலமான (definitely not) என்ற டயலாக் இடம்பெற்றுள்ள மஞ்சள் டீசர்ட்டை விஜய் அணிந்து வருகிறார். அதைத்தொடர்ந்து ‘வயசாகிடுச்சு... ஸ்குவாட விட்டு போய் பல வருஷம் ஆச்சு... எப்படின்னு யோசிக்கிறீங்களா?...’ விஜய் கூறுவதும் போலவும் ‘எவ்ளோ வயசான என்னையா... சிங்கம் எப்போவுமே சிங்கம்தான்’ என்று ஒய்.ஜி.மகேந்திரன் பேசுவது போலவும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்கள் தோனியை ஞாபகப்படுத்துவதாக சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

தமிழில் வெளியான தி கோட் ட்ரைலரின் இறுதியில் கில்லி படத்தில் விஜய் பாடும் பாணியில் ‘மருதமலை மாமணியே முருகய்யா...’ என்ற பாடலை விஜய் பாடுகிறார். அதே சமயம் இந்தியில் வெளியான தி கோட் ட்ரைலரின் இறுதியில் ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் பட மியூசிக்கை விஜய் முணுமுணுக்கிறார். மேலும் மங்காத்தா படத்தில் ‘இனிமே சத்தியமா குடிக்கக்கூடாதுடா...’ என்று அஜித் பேசும் வசனத்தை விஜய் இந்த ட்ரைலரில் பேசுகிறார்.

venkat prabhu The Greatest of All Time actor vijay
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe