Advertisment

"அவரை போன்று யோசிப்பது சிரமம்" - ரஜினி குறித்து தோனி

dhoni about rajini

Advertisment

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடி வருகிறார். 16வது சீசன் நடந்து வரும் நிலையில் 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. வருகிற 21ஆம் தேதி ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.

இதனிடையே தோனி கோட் சூட் அணிந்து கபாலி பட ரஜினி போல் உட்கார்ந்திருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் அந்த புகைப்படம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் தோனியிடம் கேட்கப்பட்டதுகுறித்து, "இதில் ஒப்பீடு எதுவும் இல்லை. ஒரு சிறந்த மனிதரின் சிறந்த போஸை காப்பி செய்ய முயற்சி செய்தோம். அதைத் தாண்டி வேறு எதுவும் இல்லை. ஏனெனில் அவரை போன்று யோசிப்பதும், செயல்படுவதும் மிகவும் சிரமமானது. இருந்தாலும் அவரது போஸையாவது காப்பி அடிப்போம்" என்றார்.

உடனே உங்களைப் போன்றும் யோசிப்பதும் சிரமம் தானே எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு "களத்தில் இருக்கலாம்" என சிரித்து கொண்டு பதிலளித்தார்.

Actor Rajinikanth Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe