Advertisment

அடுத்த வருடம் இணையும் தனுஷ்-செல்வராகவன்!

selva dhanush

தமிழ் சினிமாவின் முக்கியஇயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் 'புதுப்பேட்டை', '7ஜி ரெயின்போ காலனி' உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான, 'ஆயிரத்தில் ஒருவன்' போன்ற படங்கள், வெளியாகையில் தோல்வி அடைந்தாலும், இன்றுவரை ரசிகர்களால் பேசப்படுகிறது. ஆனால், இவர் கடைசியாகஇயக்கியசிலபடங்கள், வசூல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் தோல்வியைத்தழுவின.

Advertisment

செல்வராகவன், தனதுதம்பியானதனுஷை வைத்து, 'காதல் கொண்டேன்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' உள்ளிட்டபடங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், தனுஷை வைத்து மீண்டும்செல்வராகவன், படம் இயக்கப் போகிறார் எனத் தகவல் வெளியானது. இதற்கு முன்பு தனுஷ்- செல்வராகவனின் கூட்டணியில் வெளிவந்த படங்கள்வெற்றிப்படங்களாக இருப்பதால், இவர்கள் தற்போது இணையும் படத்திற்கு, ரசிகர்களிடையேஎதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Advertisment

இந்தநிலையில், தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த வருடம், மார்ச் மாதம் தொடங்கும் எனத் தகவல் வெளியாகிவுள்ளது. தற்போது, 'கர்ணன்', 'அத்ராங்கி ரே' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு, செல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Danush selvaraghavan
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe