dhilip subbarayan talk about valimai movie fake news

Advertisment

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது.ஆனால்இந்தியாவில் குறைந்து வந்த கரோனாபரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வலிமை படத்தின் முதல் பாதியில் விசாரணை காட்சிகளும், இரண்டாம் பாதியில் ஆக்ஷன் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளாக இருக்கும் என படத்தில் சண்டை இயக்குநராக பணியாற்றிய திலீப் சுப்பராயன் கூறியதாக சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவு வைரலானது. இதனைத் தொடர்ந்துஇதுகுறித்து விளக்கமளித்துள்ள திலீப் சுப்பராயன்," இந்த சமூகவலைத்தள கணக்கு போலியானது, தயவு செய்து பிளாக் பண்ணுங்க எனக் கூறியுள்ளார்.