டிக் டாக் செயலி இருக்கும் போது அதில் வீடியோ வெளியிட்டு பிரபலமானவர் இலக்கியா. இப்போது அவரது பெயரிலேயே யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் வீடியோ போட்டு வருகிறார். கவர்ச்சியான நடனம் மூலம் பிரபலமான இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்து வருகிறார். 

Advertisment

இந்த சூழலில் நேற்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ஸ்டண்ட் மாஸ்டர் மீது குற்றச்சாட்டு வைத்திருந்திருந்தார். “என்னோட சாவுக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் மட்டும் தான் காரணம். என்ன நம்ப வச்சி ஏமாத்திட்டான். 6 வருஷம் அவன் கூட இருந்திருக்கன், நிறைய பொன்னுங்க கூட பழக்கம். அத கேட்டா என்ன போட்டு அடிக்குறான். நானும் பொருத்து பொருத்து எனக்கு முடியல. இதையுமே நான் போட்டா, என்ன அடி அடின்னு அடிப்பான்” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

இதனையடுத்து இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அழகு மற்றும் உடற்பயிற்சிக்காகக் கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதாகவும் அதனால் போதையாகி உள்ளதாகவும் கூறப்பட்டது. அதே சமயம் தற்கொலைக்கு முயலும் நோக்கில் அதிக மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது பரபரப்பை கிளப்ப பின்பு “எல்லாமே தவறான செய்தி” என இலக்கியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எந்த செய்தி தவறு என்பதை அவர் தெளிவாக விளக்கவில்லை. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன், இலக்கியா விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது பெயரைக் குறிப்பிட்டு முற்றிலும் தவறான மற்றும் ஆதாரமற்ற ஒரு பதிவு இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டது. முதலில் அதைப் பதிவிட்ட நபர், பின்பு ‘அனைத்தும் போலி செய்திகள்’ எனக் குறிப்பிட்டு அந்தப் பதிவை நீக்கிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும் சில ஊடகங்கள் உண்மையை சரிபார்க்காமல் ஆதாரமற்ற செய்திகளை பரப்பி வருகின்றனர். இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தேவையற்ற துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

அந்த நபர் முதலில் வெளியிட்ட பதிவில் எந்த உண்மையும் இல்லை. அது முற்றிலும் தவறானது. இதையடுத்து இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை  மீண்டும் தொடர்ந்து பரப்பினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார். பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் மகன் தான் திலீப் சுப்புராயன் என்பது குறிப்பிடத்தக்கது.