hds

Advertisment

கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலையில் திரும்பிய பிறகு படங்களை வெளியிட படக்குழுவினர் வரிசைகட்டி காத்துக்கொண்டிருக்கும் நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் அதில் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இப்படம் கரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யப் படக்குழு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் நடிகர் தீனா ''மாஸ்டர் படத்தில் கார் துரத்தும் காட்சி'' எனப் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் கார் துரத்தும் காட்சி மாஸாக இருப்பதால்தான் அவர் இப்படிப் பதிவிட்டுள்ளதாக கமென்ட் செய்து வருகின்றனர். மேலும் இது ரசிகர்களிடையே மீண்டும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இப்படத்தில் நடித்த நடிகர்கள் இந்தக் கார் துரத்தும் காட்சி குறித்து பேட்டிகளில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.