Advertisment

திரைத்துறையை உலுக்கிய கொலை - சிறையில் நடிகருக்கு சொகுசு வசதி

dharshan video issue 7 officers suspended

Advertisment

பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ரேணுகா சுவாமி, தர்ஷனின் தோழி மற்றும் நடிகை பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டியுள்ளார். இதற்காக ரேணுகா சுவாமியை தர்ஷன் மற்றும் அவரது ஆட்கள் கடத்தி சென்று அவர் மீது மின்சாரத்தை செலுத்தி கடந்த ஜூன் மாதம், கொடூரமாகக் கொன்றிருக்கிறார்கள். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்த, இந்த வழக்கில் நடிகர் தர்ஷனோடு பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர் என 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தர்ஷன் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட நபர்கள் சிலரரும் பார்க் போன்ற ஒரு இடத்தில் காபி குடிப்பதும், சிகரெட் பிடிப்பதும் போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் வீடுயோ காலில் இரண்டு நபருடன் தர்ஷன் பேசும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கு குற்றவாளிக்கு சிறையில் இப்படியான வசதிகளா என புகாரும் எழுந்தது. மேலும் இது தொடர்பாக பேசிய ரேணுகா சுவாமியின் தந்தை, தர்ஷனுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் இந்த விஷயத்தில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து வெளியான வீடியோ தொடர்பாக சிறைத்துறை டி.ஜி.பி. விசாரணை நடத்த சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி ஐ.ஜி. தலைமையிலான குழு சிறையில் விசாரணை நடத்தியது. அதில் தர்மனுக்குக் காவல்துறை அதிகாரிகள் உதவயிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறையில் சொகுசு வசதிகளை செய்துகொடுத்தற்காக ஜெயிலர் உட்பட ஏழு பேரை தற்போது சிறைத்துறை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

karnataka dharshan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe