
சென்ற ஆண்டில் வட சென்னை, மாரி-2 ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வெளியிட்ட தனுஷ், இந்த ஆண்டிலும் ஐந்து படங்களுக்கு கமிட்டாகியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களும், கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் மூன்று படங்களும் நடிக்க உள்ளார்.
நேற்று புத்தாண்டை முன்னிட்டு, சத்யஜோதி ஃப்லிமிஸ் தயாரிப்பு நிறுவனத்தின் 34 வது படத்தில் துரை செந்தில்குமார் இயக்க, தனுஷ் நடிக்கிறார் என்றும், 35வது படத்தில் ராட்சசன் புகழ் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் அசூரன் படத்திற்கும், மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திற்கும் ஒப்புதல் ஆகியுள்ளார்.
தனுஷ் ஏற்கனவே சத்யஜோதி ஃபிலிம்ஸில் தொடரி என்ற படத்தில் நடித்திருந்தார். அது தோல்வி அடைந்ததை அடுத்து, அதற்கு ஈடுகட்டும் விதமாக சத்யஜோதி ஃபிலிம்ஸுக்கு இரண்டு படங்களுக்கான கால்சீட்டை அளித்துள்ளார். அதேபோல விஐபி-2 க்கான தோல்வியை ஈடுகட்டவே வி கிரியேஷனில் மூன்று படங்களுக்கான கால் சீட்டை கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.