Dhanush's 'Tiruchitrambalam'; The crew that announced the character

தனுஷ், செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள இவர் தற்போது தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தில் நடித்துள்ளார். நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்து பணிகளையும் முடித்த படக்குழு வெளியீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் 'ரெட் ஜெயண்ட் மூவிஸ் ' நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Advertisment

இந்நிலையில் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் கதாபாத்திரத்தின் அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன் படி ராஷி கண்ணா 'அனுஷா'என்ற கதாபாத்திரத்திலும், தனுஷின் ஸ்கூல் க்ளாஸ்மேட்டாக படத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனை ஒரு வீடியோ மூலம் படக்குழுவு தெரிவித்துள்ளது.

Advertisment