Advertisment

சர்வதேச விருதை வென்ற தனுஷ் படம்!

Dhanush's film won an international award

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் பெரும்வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இதற்கிடையில், இந்தப் படம் லண்டனில் நடைபெற்ற பிரஸ்டீஜியஸ் (Prestigious) நேஷனல் பிலிம் அவார்டில் பெஸ்ட் ஃபாரின் லேங்குவேன் ஃபிலிம் 2024 எனும் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான செய்தியை, தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தப் பிரிவில், இந்தியாவைச் சேர்ந்த பாக்ஸாக் என்ற திரைப்படமும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தது. அதோடு உலகில் உள்ள முக்கிய படங்களும் இந்தப் பிரிவில் நாமினேட் செய்யப்பட்டிருந்தது.

Advertisment

இந்த நிலையில், பெஸ்ட் ஃபாரின் லாங்குவேஜ் (Best foreign language) 2024 என்கிற விருதை தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் கைப்பற்றியுள்ளது. தமிழ் சினிமா சர்வதேச அளவில் வெற்றி பெற்றிருப்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

DHANUSH Captain Miller actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe