தனுஷுடனான விவாகரத்தை அறிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 'பயணி' ஆல்பம் பாடலை உருவாக்கும் பணிகளில் கவனம் செலுத்திவந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்துள்ளார். தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அங்கித் திவாரியும் பாடியுள்ளனர். இதன் ப்ரோமோ வீடியோ வெளியான நாள் முதலேஇந்த பாடலின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'பயணி' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இதனைபகிர்ந்து திரைப்பிரபலங்கள் பலர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'பயணி' பாடலைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்ததனுஷ், "என்னுடைய தோழி ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள்"எனக் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்து பெற்று தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழும் நிலையில் தோழி என்று தனுஷ் செய்த ட்வீட் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payanihttps://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022