dhanush visit temple for raayan success

தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். இதனைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Advertisment

இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதனால் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது படக்குழு. தெலுங்கிலும் புரொமோஷன் தொடர்கிறது. அண்மையில் அங்கு புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் பேசும் தனுஷ் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ராயன் படம் வெற்றி பெறவேண்டி, தனது குலதெய்வ கோயிலில் சிறப்பு வழிபாடு செய்துள்ளார். தேனியில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரத்தில் ஸ்ரீகஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலில் தனது இரண்டு மகன்களுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவரைப் பார்த்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்பு தனுஷ், தேவாரம் அருகிலுள்ள தனது தாயார் வழி குலதெய்வ கோயிலான சங்கராபுரம் கருப்பசாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார்.