"படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும்" - பதிலடி கொடுக்கும் வாத்தி தனுஷ்

dhanush vaathi trailer released

தனுஷ் நேரடியாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் அனைத்து பாடல்களும் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தன. இப்படம் வருகிற 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரை பார்க்கையில் கல்விக்கு பின்னால் நடக்கும் அரசியலைப் பற்றி விரிவாகப் பேசியிருப்பது போல் தெரிகிறது. தனுஷுக்கென்று சில பன்ச் வசனங்களும் ஆக்‌ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. காதல் காட்சிகளும் வருகிறது. ஆக்‌ஷன், காதல் கலந்து கல்வி குறித்த ஒரு மெசேஜ் கூறும் படமாக உருவாகியுள்ளது போல் தெரிகிறது.

ட்ரைலரில்ஒரு காட்சியில் வில்லனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், "பணம் எப்படி வேணும்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா, படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சு தரும்" எனதனுஷ் பேசும் வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், இந்த ட்ரைலர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

actor dhanush vaathi movie
இதையும் படியுங்கள்
Subscribe