தனுஷின் நேரடி தெலுங்கு பட டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியீடு!

vaathi

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாறன்’ மற்றும் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அத்ரங்கி ரே' படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் தனுஷ், தற்போது செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘நானே வருவேன்’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="26727bcc-c6c0-4c32-ba61-474e78388971" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Rocky-article-inside-ad_0.jpg" />

இந்தப் படத்தைத் தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளார்.பிரபல தயாரிப்பாளர் நாகா வம்சி தயாரிக்கவுள்ள இப்படம், நேரடி தெலுங்கு படமாக வெளியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு முன்னரே வெளியாகியிருந்த நிலையில், படத்தின் தலைப்பைப் படக்குழு இன்று (23.12.2021) வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு தெலுங்கில் ‘சார்’ என்றும், தமிழில் ‘வாத்தி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும்,படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.இப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

actor dhanush
இதையும் படியுங்கள்
Subscribe