'படிப்பு பிரசாதம் மாதிரி...கொடுங்க விக்காதிங்க' - தனுஷ் அதிரடி

dhanush vaathi movie teaser released

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் கால் பதித்த தனுஷ் அடுத்து டோலிவுட்டில் அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படம் தமிழில் 'வாத்தி' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் இசைப் பணிகள் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தனுஷ் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடிவரும் நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 'வாத்தி' படத்தின் ஃபர்ஸ்ட் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியிட்டது படக்குழு. இதனை தொடர்ந்து தற்போது 'வாத்தி' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆசிரியராக வரும் தனுஷ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசுவது போல் வெளியாகியுள்ளது இந்த டீசர். மேலும் இந்த டீசர் தனுஷ் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

actor dhanush vaathi movie
இதையும் படியுங்கள்
Subscribe