ADVERTISEMENT

தனுஷின் பர்த்டே ட்ரீட்; வெளியான ஃபர்ஸ்ட் லுக்

12:18 PM Jul 27, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியாக நடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தமிழில் 'வாத்தி' எனத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாக வம்சி மற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது, மேலும் இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்ததாக அமைந்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT