தமிழ் மற்றும் இந்தி மொழிகளில்பிசியாகநடித்து வரும் தனுஷ் தெலுங்கில் நேரடியாக அறிமுகமாகவுள்ள படம் 'சார்'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும்இப்படத்திற்குதமிழில் 'வாத்தி'எனத்தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. நாகவம்சிமற்றும் சாய் தயாரிக்கின்ற இப்படத்தைவெங்கிஅட்லூரிஇயக்குகிறார். சம்யுக்தாமேனன்கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைபடக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தனது பிறந்தநாளை நாளை கொண்டாடவுள்ள நிலையில், அதனை முன்னிட்டு வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைவெளியிட்டுள்ளது, மேலும் இப்படத்தின்டீசர் நாளைமாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் விருந்ததாக அமைந்துள்ளது.